NATIONAL

காணாமல் போனதாகக் கூறப்பட்ட 10 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

24 ஜூலை 2024, 3:08 AM
காணாமல் போனதாகக் கூறப்பட்ட 10 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

ஜோகூர் பாரு, ஜூலை 23: நேற்று மதியம் மவுண்ட் ஆஸ்டினில் உள்ள பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது காணாமல் போனதாகக் கூறப்பட்ட 10 வயது சிறுவனை ஏயோன் டெப்ராவ் ஷோப்பிங் சென்டரில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

ஃபூன் யூ 5 சீனப் பள்ளியில் நான்காம் ஆண்டு படிக்கும் செங் டோங் யாவ், மாலை 4.30 மணியளவில் பாதுகாப்பான நிலையில் கண்டுபிடிக்கப் பட்டதாகத் தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ராவுப் செலாமட் தெரிவித்தார்.

"அவர் பள்ளியில் இருந்து ஏயோன் டெப்ராவுக்கு நடந்து சென்றுள்ளார்," என்று செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

பள்ளிப் பேருந்தை தவற விட்ட செங் பிறகு புத்தகப் பையை எடுத்துக் கொண்டு தனியாக நடந்து சென்றது சமூக வலைதளங்களில் வைரலானது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.