NATIONAL

துர்நாற்றம் காரணமாக 4 நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

23 ஜூலை 2024, 7:22 AM
துர்நாற்றம் காரணமாக 4 நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஜூலை 23: சுங்கை குண்டாங் மற்றும் சுங்கை செம்பாவில் துர்நாற்றம் மாசு ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் (எல்ஆர்ஏ) பணியை பெங்குருசன் ஆயர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அவை ரந்தாவ் பாஞ்சாங், சுங்கை சிலாங்கூர் கட்டம் 1 (எல்ஆர்ஏ எஸ்எஸ்பி1), சுங்கை சிலாங்கூர் கட்டம் 2 (எல்ஆர்ஏ எஸ்எஸ்பி2) மற்றும் சுங்கை சிலாங்கூர் கட்டம் 3 (எல்ஆர்ஏ எஸ்எஸ்பி3) ஆகிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகும்

பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய ஏழு பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடைகளினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

"இந்த காலக்கட்டம் முழுவதும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளித்து, லாரிகள் மூலம் மாற்று உதவி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும்," என்று அவர் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல் எதிர்காலத்தில் பகிரப்படும்.

பயனர்கள் ஆயர் சிலாங்கூர் செயலி , முகநூல், இன்ஸ்டாகிராம், மற்றும் X பக்கம் மூலம் கூடுதல் தகவல்களை பெறலாம் அல்லது 15300இல் ஆயர் சிலாங்கூரை தொடர்புகொள்ளலாம் அல்லது https://airselangor.com ஐப் பார்வையிடவும்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.