கோலாலம்பூர், ஜூலை 23 - ஜோகூர் பாரு, இஸ்கந்தார் புத்ரியில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன ஆறு வயதுச் சிறுமி சிலாங்கூர் மாநிலத்தில் பாதுகாப்பாக மீட்கப் பட்டார்.
அச்சிறுமி மீட்கப் பட்டதை உறுதிப்படுத்திய சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான், பத்தாங் காலி வட்டாரத்தில் அவர் கண்டு பிடிக்கப் பட்டதாகக் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் விரைவில் அறிக்கை வெளியிடுவார் என பெர்னாமா தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இஸ்கந்தார் புத்ரியில் உள்ள பேரங்காடி ஒன்றிலிருந்து காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட அல்பெர்ட்டின் லியோ ஜியா என்ற ஆறு வயதுச் சிறுமியைக் கண்டு பிடிக்க உதவும் படி இஸ்கந்தார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். குமரேசேன் பொது மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.


