NATIONAL

குழந்தைகள் பராமரிப்பில் இல்லத்தரசிகள் வருமானம் ஈட்ட இம்பாக் திட்டம் உதவும்

23 ஜூலை 2024, 6:10 AM
குழந்தைகள் பராமரிப்பில் இல்லத்தரசிகள் வருமானம் ஈட்ட இம்பாக் திட்டம் உதவும்

ஷா ஆலம், ஜூலை 23:  குழந்தைகள் பராமரிப்பில்  இல்லத்தரசிகள் வருமானம் ஈட்ட யாயாசான் வாரிசன் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) நடத்தும் இல்திசம் ஆரம்பக் குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி திட்டம் (இம்பாக்) உதவுகிறது.

குழந்தைகள் பராமரிப்பு  தொடர்பான கல்வி மூலம் பெண்களின் திறமைகளை மேம்படுத்துவதுடன்,  ஒரு புதிய  தொழிலை உருவாக்குவதற்கான இடமாகவும் இத்திட்டம் உள்ளது என்று இம்பாக்கின் பொது மேலாளர் கான் பெய் நி கூறினார்.

" குழந்தைகள் பராமரிப்புத் துறையானது இல்லத்தரசிகள் மற்றும் பெண்கள் மத்தியில் ஒரு வேலையாக மாறியுள்ளது. இது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வருமான ஆதாரத்தையும் உருவாக்க முடியும்.

"யாவாஸ் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு முறையை செயல்படுத்துகிறது. இது மூலம் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இத்திட்டத்தில் பயிற்சி பெற்றுள்ள பராமரிப்பாளர்களை தேர்வு செய்ய உதவுகிறது," என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் டிவி சேனலில் ``HAI SELANGOR`` நிகழ்ச்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் போது அவர் இவ்வாறு கூறினார்.

பல்வேறு அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) மற்றும் சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) ஆகியவற்றுடன் இணைந்து இப்பயிற்சி திட்டத்தை யாவாஸ் செயல்படுத்துகிறது.

குழந்தை பராமரிப்பு தொடர்பான சட்டங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளும் சமூக நலத்துறையும் ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளது.

"மேலும், நாங்கள் மலேசிய சுகாதாரத் துறையுடன் இணைந்து உணவு ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பாதுகாப்பு பற்றி தெரியப் படுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.

குழந்தைகள் மேம்பாட்டு தீவிரப் பயிற்சியை (KIPK) இலவசமாகப் பெறத் தேர்ந்தெடுக்கப் பட்ட 200 பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் தலா RM2,000 மதிப்பிலான மானியத்தைப் பெறுவதற்கான வாய்ப்பையும் அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.