NATIONAL

பல்பொருள் அங்காடி சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு இளைஞர்களுக்கு லேசான காயம்

23 ஜூலை 2024, 5:49 AM
பல்பொருள் அங்காடி சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு இளைஞர்களுக்கு லேசான காயம்

ஈப்போ, ஜூலை 23: நேற்று பல்பொருள் அங்காடியில் சுவர் இடிந்து விழுந்ததில் 15 வயதுடைய இரண்டு இளைஞர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

மாலை 4.45 மணி அளவில் இச்சம்பவம் தொடர்பான புகாரை பெற்றதாக பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல் பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.

"சம்பவத்தின் போது அப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இடிபாடுகளில் சிக்கி சிறு காயங்களுக்கு உள்ளாகினர். பொதுமக்கள் அளித்த தகவல்படி பாதிக்கப்பட்டவர்களை பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவில்லை," என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

கடந்த மார்ச் 10ம் தேதி அந்த சூப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் உள்ள மின் பகிரும் பேனல் சேதமடைந்ததால் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.