NATIONAL

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை, மகன் மரணம் - இருவர் காயம்

23 ஜூலை 2024, 5:14 AM
மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை, மகன் மரணம் - இருவர் காயம்

குவாந்தான், ஜூலை 23 - கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தெரு

விளக்கு கம்பத்தை மோதியதில் தந்தையும் மகனும் பரிதாபமாக

உயிரிழந்தனர். இச்சம்பவம் ஜெராண்டூட்-தெமர்லோ சாலையின் 18வது

கிலோ மீட்டரில் நேற்றிரவு 8.00 மணியளவில் நிகழ்ந்தது.

இந்த விபத்தில் முகமது இஷாம் சானி (வயது 43) மற்றும் அவரின்

மகனான முகமது அய்ஷி அஃபான் (வயது 6) ஆகியோர் சம்பவ

இடத்திலேயே உயிரிழந்ததாக ஜெராண்டூட் மாவட்ட போலீஸ் தலைவர்

சூப்ரிண்டெண்டன் ஜூக்ரி முகமது கூறினார்.

வீடு கட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த முகமது இஷாம், தன் மனைவி

முனிரா மாமுட் (வயது 28), இரு பிள்ளைகளான முகமது அய்ஷி மற்றும்

முகமது உமர் அஃபான் (வயது 4) ஆகியோருடன் தன் மாமனார்

வீட்டிலிருந்து தங்கள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்

கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது தொடக்கக் கட்ட

விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள்

கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தெரு விளக்கை மோதியது

என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த முனிராவும் முகமது உமர் அஃபானும்

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும்

சொன்னார்.

இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்

சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.