NATIONAL

ஆறு வயது சிறுமி காணாமல் போன புகாரில் மூவர் தடுத்து வைப்பு 

23 ஜூலை 2024, 3:31 AM
ஆறு வயது சிறுமி காணாமல் போன புகாரில் மூவர் தடுத்து வைப்பு 

ஜோகூர் பாரு, ஜூலை 23: சனிக்கிழமை அன்று இஸ்கண்டார் புத்ரியில் உள்ள ஒரு ஷோப்பிங் சென்டரில் காணாமல் போன ஆறு வயது சிறுமி தொடர்பான விசாரணையில் உதவ மூன்று நபர்களை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

நேற்று மதியம் 1.30 மணியளவில் இஸ்கண்டார் புத்ரியை சுற்றி 28 முதல் 55 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்களும் மற்றும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் சிபி எம் குமார் தெரிவித்தார்.

எனினும் சிறுமி ஆல்பர்டைன் லியோ ஜியா ஹுய் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நபரை ரகசியமாகவும் தவறாகவும் அடைத்து வைக்கும் நோக்கத்துடன் கடத்தி செல்லும் குற்றவியல் சட்டத்தின் 365வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது”என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு இடையூறாக அமையும் ஊகங்களைப் பரப்ப வேண்டாம் மற்றும் எந்தவொரு தகவலையும் ஜோகூர் காவல்துறையின் ஹாட்லைன் 019-2792 095 அல்லது செயல்பாட்டு அறைக்கு 07-2212 999 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

இரவு 8.30 மணியளவில் ஷோப்பிங் சென்டரில் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி கோரப்படுகிறது

ஏறக்குறைய 120 சென்டிமீட்டர் உயரம், நீண்ட கருப்பு முடி, லேசான தோல் மற்றும் மிதமான மெல்லிய உடல் கொண்ட அச்சிறுமி 'மிக்கி மவுஸ்' படம் கொண்ட வெள்ளை டி-ஷார்ட்டை அணிந்திருந்ததாக அவர் மேற்கோள் காட்டினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.