NATIONAL

பூமிபுத்ரா நிறுவனங்கள் ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

23 ஜூலை 2024, 3:29 AM
பூமிபுத்ரா நிறுவனங்கள் ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சபாக் பெர்ணம், ஜூலை 23: பூமிபுத்ரா நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தைகளில்  போட்டியிடும் போது தங்கள் தயாரிப்புகளை மேலும் வலுப்படுத்த ஹலால் சான்றிதழைப் பெற விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையில் இருந்து (ஜாகிம்) ஹலால் சான்றிதழ் விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 30 சதவீதம் பேர் மட்டுமே பூமிபுத்ரா தொழில் முனைவோர் என்று தரவுகள் காட்டுவதாக இஸ்லாமிய ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஃபஹ்மி நகா கூறினார்.

"தரவின் அடிப்படையில், பூமிபுத்ரா அல்லாதவர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், ஏனெனில் அவர்கள் சந்தையில் நுழைய ஹலால் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும், காரணம் பல நுகர்வோர் முஸ்லிம்கள் ஆவர்.

"இருப்பினும், பூமிபுத்ரா நிறுவனங்களையும் விண்ணப்பிக்க ஊக்குவிக்கிறோம். ஹலால் சான்றிதழுக்காக விண்ணப்பிப்பதற்கு செலவாகும் என்பது உண்மைதான், ஆனால் அது சுமையை ஏற்படுத்தாது. மலேசியாவின் ஹலால் சான்றிதழ் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் பூமிபுத்ரா தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

23 வேலை நாட்களுக்குள் ஹலால் சான்றிதழைப் புதுப்பிக்கும் செயல்முறையை சிலாங்கூர் நடைமுறைப்படுத்தத் தொடங்கியதாக ஃபஹ்மி கூறினார்.

“ஹலால் சான்றிதழ் விண்ணப்பம் அடுத்த ஆண்டு தொடங்கி 23 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், சிலாங்கூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.