NATIONAL

டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,373ஆகக் குறைந்துள்ளது

21 ஜூலை 2024, 9:37 AM
டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,373ஆகக் குறைந்துள்ளது

புத்ராஜெயா, ஜூலை 21: ஜூலை 7 முதல் 28 வரையிலான 28வது தொற்றுநோயியல்

வாரத்தில் (ME28) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய

வாரத்தோடு (2,805) ஒப்பிடும்போது 2,373ஆகக் குறைந்துள்ளது. இறப்புகள் எதுவும்

பதிவாகவில்லை.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 63,966 டிங்கி சம்பவங்கள் பதிவான நிலையில்

இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 80,441ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர்

ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

இவ்வாண்டு 65 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2023 இல் 45 இறப்புகள்

மட்டுமே பதிவாகி இருந்தன, என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

​​மேலும், தொற்றுநோயியல் 28வது வாரத்தில் 100 ஹாட்ஸ்பாட் இடங்கள்

பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

100 வட்டாரங்களில் சிலாங்கூரில் 74 இடங்களும், நெகிரி செம்பிலான் மற்றும்

பேராக்கில் தலா ஆறு இடங்களும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் ஆறு

இடங்களும், கெடாவில் நான்கு இடங்களும், பினாங்கில் இரண்டு இடங்களும், சரவாக்

மற்றும் சபாவில் தலா ஒரு இடமும் பதிவாகியுள்ளன.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.