NATIONAL

உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

21 ஜூலை 2024, 9:34 AM
உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

அலோர் செட்டார், ஜூலை 21: நேற்று படாங் தெராப் அருகே உள்ள டுரியன் பூரோங் பகுதியில், உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தாய்லாந்து நாட்டவர் என்று நம்பப்படும் பெண்ணின் சடலம் (30), அப்பகுதியில் உள்ள பழைய சாலையின் ஓரத்தில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது என படாங் தெராப் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முல்கியாமன் மன்சார் கூறினார்.

"இரவு 7 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக எங்களுக்கு புகார் ஒன்று கிடைத்தது. பின், சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறை அதிகாரிகளின் குழு அனுப்பப்பட்டது மற்றும் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அப்பெண்ணின் உடலைக் கண்டுபிடித்தோம்," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.