NATIONAL

செவ்வாய்க்கிழமை 2023 எஸ்.டி. பி.எம். தேர்வு முடிவுகள் வெளிவரும்

21 ஜூலை 2024, 3:02 AM
செவ்வாய்க்கிழமை 2023 எஸ்.டி. பி.எம். தேர்வு முடிவுகள் வெளிவரும்

புத்ராஜெயா, ஜூலை 21 – கடந்தாண்டிற்கான  எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள் எதிர்வரும்  ஜூலை 23ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை வெளிவரும்.

அன்றைய தினம்  காலை 11.30 மணி முதல் மாணவர்கள் தங்களது  தேர்வு முடிவுகளை இணையம் வழி அறிந்து கொள்ளலாம்  என மலேசிய தேர்வுகள் மன்றம் (எம்பிஎம்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தேர்வை எழுதிய மாணவர்கள் குறுஞ் செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக அதாவது  STPM/அ/கார்டுஎண்/பதிவு  எண்ணைத் தட்டச்சு செய்து 15888 என்ற அனுப்புவதன்  வழி முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள உதவும் இந்த முறை  ஜூலை 23 காலை 11 மணி முதல் ஜூலை 30 மதியம் வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தேர்வு மன்றம் கூறியது.

நாடு முழுவதும் 41,548 மாணவர்கள் கடந்தாண்டு எஸ்.டி.பி.எம் தேர்வை எழுதினர். 16,387 பேர் தேர்வு  கண்காணிப்பாளர்களாக இருந்தனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.