NATIONAL

தேசிய மாத தொடக்க நிகழ்வையொட்டி இலவச பஸ் சேவை

19 ஜூலை 2024, 6:08 AM
தேசிய மாத தொடக்க நிகழ்வையொட்டி இலவச பஸ் சேவை

கோலாலம்பூர், ஜூலை 19 - எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சைபர் ஜெயாவில் நடைபெறவிருக்கும் தேசிய மாத தொடக்கம் மற்றும் 2024 ஜாலுர் கெமிலாங்கை (தேசிய கொடி) பறக்கவிடும் இயக்கத்தின் தொடக்க நிகழ்வை முன்னிட்டு வருகையாளர்களுக்கு இலவச பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச பஸ் சைபர் ஜெயாவிலுள்ள பார்க் ரைட் மற்றும் ரெக்காஸ்கேப் ஆகிய இரு இடங்களிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்று நிகழ்வு நடைபெறும் இடமான சைபர் இவெண்ட் ஹாலில் இறக்கி விடும் என்று மலேசிய தகவல் இலாகா வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இலவச பஸ் சேவை காலை 8.00 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை வாகன போக்குவரத்தைப் பொறுத்து 30 நிமிட இடைவெளியில் மேற்கொள்ளப்படும்.

சமூக விழா வடிவத்தில் நாட்டு மக்களிடையே நாட்டுப் பற்றை விதைக்கும் நோக்கிலான இந்நிகழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.