NATIONAL

266வது ஆட்சியாளர்கள் மாநாட்டில் பேரரசர் கலந்து கொண்டார்

18 ஜூலை 2024, 9:29 AM
266வது ஆட்சியாளர்கள் மாநாட்டில் பேரரசர் கலந்து கொண்டார்

கோலாலம்பூர், ஜூலை 18 -  இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற 266வது ஆட்சியாளர்கள் மாநாட்டில் மாட்சிமை தாங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

நேற்று தொடங்கிய இரண்டு நாள் கூட்டத்திற்கு நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்டுவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் தலைமை தாங்கினார்.

பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா, கெடா சுல்தான் அல்-அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுடின் சுல்தான் பட்லிஷா, பெர்லிஸ் ரீஜண்ட்  துவாங்கு சைட்  ஃபைசுடின் புத்ரா ஜமாலுல்லால்  மற்றும் ஜோகூர் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

பகாங் தெங்கு  மக்கோத்தா ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா, கிளந்தான்  தெங்கு மக்கோத்தா முஹம்மது ஃபக்ரி பெட்ரா  மற்றும் சிலாங்கூர் தெங்கு சுலைமான் ஷா தெங்கு லக்சமானா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பினாங்கு யாங் டி பெர்த்துவா  நெகிரி துன் அகமது புஸி அப்துல் ரசாக், மலாக்கா யாங் டி பெர்த்துவா நெகிரி துன் முகமது அலி ருஸ்தாம், சபா யாங் டி பெர்த்துவா நெகிரி துன் ஜுஹார் மஹிருடின், சரவாக் யாங் டி பெர்த்துவா நெகிரி துன் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபர் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டார். ஆட்சியாளர்களுடன் அந்தந்த மாநில  மந்திரி புசார்களும் மற்றும் யாங் டி பெர்த்துவா நெகிரிகளுடன் முதலமைச்சர்களுடன் உடனிருந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.