NATIONAL

கட்டுப்பாட்டை இழந்த லோரி ஆறு வாகனங்களை மோதியது - இருவர் பலி

18 ஜூலை 2024, 4:53 AM
கட்டுப்பாட்டை இழந்த லோரி ஆறு வாகனங்களை மோதியது - இருவர் பலி

சிப்பாங், ஜூலை 18 - ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு

காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த லோரி எதிர்த்தடத்தில் நுழைந்து ஆறு

வாகனங்களை மோதித் தள்ளியது. இங்குள்ள ஜாலான் புக்கிட் டுகாங்கில்

நேற்று காலை நிகழ்ந்த இந்த விபத்தில் இரு மோட்டார் சைக்கிளோட்டிகள்

பரிதாபமாக உயிரிழந்தனர்.

காலை 9.10 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 31 மற்றும் 53

வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டிகள் பலியானதாக சிப்பாங் மாவட்ட

போலீஸ் தலைவர் வான் கமாருள் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.

இந்த விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டிகளில் ஒருவர் சம்பவ

இடத்திலும் மற்றொருவர் புத்ராஜெயா மருத்துவமனையிலும்

உயிரிழந்தனர் என்று அவர் சொன்னார்.

புத்ராஜெயாவிலிருந்து ஜெண்டேராம் நோக்கி லோரியைச் செலுத்திக்

கொண்டிருந்த போது 40 வயதுடைய அந்த ஓட்டுநருக்கு திடீரெ மாரடைப்பு

ஏற்பட்டதாக நம்பப்படுகிறது இதனால் கட்டுப்பாட்டை இழந்த லோரி

எதிர்தடத்தில் நுழைந்து நான்கு கார்கள் மற்றும் இரு மோட்டார்

சைக்கிளை மோதித் தள்ளியது தொடக்கக் கட்ட விசாரணையில்

தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான லோரி ஓட்டுநர் புத்ரா

ஜெயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்

அனுமதிக்கப்படுள்ளார் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.