NATIONAL

பழுதடைந்த சாலைகள் மற்றும் தெரு விளக்குகள் 24 மணி நேரத்திற்குள் சீரமைக்கப்பட்டன - இன்ஃப்ராசெல்

18 ஜூலை 2024, 3:56 AM
பழுதடைந்த சாலைகள் மற்றும் தெரு விளக்குகள் 24 மணி நேரத்திற்குள் சீரமைக்கப்பட்டன - இன்ஃப்ராசெல்

ஷா ஆலம், ஜூலை 18: பொதுமக்களிடமிருந்து X தளம் மூலம் பழுதடைந்த சாலைகள் மற்றும் தெரு விளக்குகள் பற்றி பெறப்பட்ட புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப் பட்டதாக மாநில சாலை பராமரிப்பு நிறுவனம் இன்ஃப்ராசெல் தெரிவித்துள்ளது.

பி13 ஜாலான் செர்டாங் பெர்டானாவில் சேதமடைந்த சாலையையும், ஜாலான் ஆயர் இத்தாம், சிப்பாங்கில் சேதமடைந்த தெரு விளக்குகளை சரிசெய்து விட்டதாக இன்ஃப்ராசெல் தெரிவித்துள்ளது.

மேலும், ஜாலான் உத்தாமா கெலோம்போக், பூலாவ் மெரந்தி, சிப்பாங்கில் சேதமடைந்த சாலையையும் ஜூலை 13 ஆம் தேதி சரிசெய்யப் பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"#INFRASEL #NamaJalan #Daerah" என்ற குறியீடு உடன் X பக்கத்தில் ஒரு ட்வீட்டைப் பதிவேற்றுவதன் மூலம் புகார் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

பயனாளர்களின் வசதிக்காகச் சிலாங்கூர் பொதுப்பணித் துறையின் (JKR) மேற்பார்வையின் கீழ் மாநிலச் சாலைகளைப் பராமரிக்கும் பொறுப்பு இன்ஃப்ராசெல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சேதமடைந்த சாலைகள் தொடர்பாக X பக்கத்தில் புகார் அளிக்குமாறு டத்தோ மந்திரி புசார் பொதுமக்களை ஊக்குவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.