ECONOMY

16வது மாடியிலிருந்து விழுந்து  நான்கு வயதுச் சிறுமி பரிதாப மரணம்

16 ஜூலை 2024, 6:52 AM
16வது மாடியிலிருந்து விழுந்து  நான்கு வயதுச் சிறுமி பரிதாப மரணம்

புத்ராஜெயா, ஜூலை 16:  ப்ரிசிண்ட் 9ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்  16வது மாடியிலுள்ள வீட்டின்  படுக்கையறையிலிருந்து  தவறி விழுந்து நான்கு வயது சிறுமி உயிரிழந்தார்.

இன்று காலை 7.50 மணியளவில் அக்குழந்தை விழுந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு மெர்ஸ் 999 அவசர அழைப்பின் மூலம் தகவல் கிடைத்ததாக  புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைவர்  ஏ.சி.பி. ஏ. அஸ்மாடி அப்துல் அஜிஸ் கூறினார்.

சம்பவம் நிகழ்ந்த போது  அக்குழந்தையின் தந்தை மூத்த மகளை  அருகிலுள்ள பள்ளிக்கு அனுப்பச் சென்ற வேளையில்  குழந்தையின் தாய் மழலையர் பள்ளி ஆசிரியை வேலைக்குச் சென்றிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இறந்த அச்சிறுமி இரண்டு உடன்பிறப்புகளில்  இளையவர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காகு   புத்ராஜெயா மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது என அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.