NATIONAL

காலுறையில் அல்லா வாசகம்- கே.கே.மார்ட் நிறுவனர்,  விற்பனை நிறுவனத்திற்கு தலா வெ.60,000 அபராதம்

15 ஜூலை 2024, 9:48 AM
காலுறையில் அல்லா வாசகம்- கே.கே.மார்ட் நிறுவனர்,  விற்பனை நிறுவனத்திற்கு தலா வெ.60,000 அபராதம்

ஷா ஆலாம், ஜூலை, 15 - கடந்த மார்ச் மாதம் முஸ்லீம்களின் மனம் புண்படும் வகையில் அல்லா வாசகம் பொறிக்கப்பட்ட காலுறைகளை விற்பனை செய்த குற்றத்திற்காகக் கே.கே.சூப்பர்மார்ட் & சூப்பர்ஸ்டோர் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கு  60,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த காலுறைகளை விநியோகித்த  ஷின் ஜியாங் சான் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கும் அதே அபராதத் தொகையை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் விதித்தது.

தங்களுக்கு எதிரான  குற்றச்சாட்டை  ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து கே.கே. மார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தீ கோக் ஹியேம் ( வயது 61) மற்றும் விநியோக நிறுவனத்தின்  இயக்குநர் சோ ஹூய் சான் (வயது 36) ஆகிய இருவருக்கும் நீதிபதி  முகமது  ஹனாஸ் மஹாட்ஸிர் இத்தண்டனையை விதித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.