NATIONAL

வாடகை காரை டெலிவரி செய்த பெண்ணை காணவில்லை

13 ஜூலை 2024, 7:59 AM
வாடகை காரை டெலிவரி செய்த பெண்ணை காணவில்லை

ஈப்போ, ஜூலை 13: கடந்த புதன்கிழமை தஞ்சோங் மாலிமில் உள்ள வாடகை கார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளருக்கு வாடகைக் காரை டெலிவரி செய்த பிறகு காணாமல் போனார்.

நூர் ஃபரா கர்தினி அப்துல்லா என்று அழைக்கப்படும் பெண் நேற்று அதிகாலை 1.56 மணியிலிருந்து காணவில்லை என அவரது வீட்டார் புகார் அளித்ததாக முஹல்லிம் மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமட் ஹஸ்னி முகமட் நசீர் தெரிவித்தார்.

"பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் எந்த பதிலும் இல்லை. பாதிக்கப்பட்டவருக்கு காதலன் ஒருவர் இருப்பது தெரிய வந்தது. மேலும், விசாரணைக்கு உதவுவதற்காக அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்" என அவர் கூறினார்.

சரவாக்கைச் சேர்ந்த மற்றும் ``யுப்சி`` பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான நூர் ஃபரா கர்தினி, கடைசியாகப் பார்த்த போது நீல நிற கார்ப்பரேட் ஆடை, துடோங் மற்றும் கருப்பு ஸ்லாக்ஸ் அணிந்திருந்தார்.

எனவே, வழக்கு தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் முஹவல்லிம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை (IPD) 05-4596122 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.