NATIONAL

முன்னாள் தலைமை நீதிபதி காலமானார்

12 ஜூலை 2024, 3:04 AM
முன்னாள் தலைமை நீதிபதி காலமானார்

கோலாலம்பூர், ஜூலை 12: முன்னாள் தலைமை நீதிபதி துன் முகமட் டிசைடின் அப்துல்லா தனது 86வது வயதில் பிரின்ஸ் கோர்ட் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார்.

அரசாங்க முன்னாள் தலைமை வழக்கறிஞர் தான் ஸ்ரீ முகமட் அபாண்டி அலி அவர்கள் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த செய்தியை இரவு 7.15 மணிக்கு முகமட் டிசைடின் அவரின் நண்பர் மற்றும் முன்னாள் நீதிபதியுமான டான்ஸ்ரீ முகமட் ஜவாவி சாலே மூலம் தெரிவிக்கப் பட்டதாக முகமட் அபாண்டி கூறினார்.

"உடல் இன்று காலை 10 மணிக்கு புக்கிட் கியாரா கல்லறையில் அடக்கம் செய்யப்படும். 2002ல் என்னை நீதித்துறைக்குள் கொண்டு வந்ததற்கு முகமட் டிசைடின்தான் காரணம். அல்-ஃபாத்திஹா" என்று அவர் மேலும் கூறினார்.

2000 முதல் 2003 வரை தலைமை நீதிபதியாக பணியாற்றிய முகமட் டிசைடின், நீதித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் ஆவார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.