ECONOMY

ரிபோர்மாஸி  இயக்கவாதி ஹென்றி ஆல்பர்டின்  மகனின் சிகிச்சைக்கு பிரதமர் நிதியுதவி

6 ஜூலை 2024, 9:04 AM
ரிபோர்மாஸி  இயக்கவாதி ஹென்றி ஆல்பர்டின்  மகனின் சிகிச்சைக்கு பிரதமர் நிதியுதவி

கோலாலம்பூர், ஜூலை 6- ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள ரிபோர்மாஸி இயக்கவாதி ஹென்றி ஆல்பர்ட்டின்   மகன் டேஷ்வின் ஹென்றிக்கு   உடனடி அறுவை சிகிச்சை  மற்றும் தொடர் சிகிச்சைக்கு உண்டாகும் செலவின சுமையை குறைக்க உதவும் வகையில்   பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதியுதவி வழங்கினார்.

இந்த நன்கொடையை பிரதமரின் சார்பில் அவரின்  அரசியல் செயலாளர் அகமது ஃபர்ஹான் பவுஸி,  சமீபத்தில் செந்தூலில் நடைபெற்ற ஜியாரா மடாணி  நிகழ்வில் ஹென்றியிடம்  வழங்கினார்.

டேஷ்வின்  அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக  முடித்து  விரைவில் குணமடையவும்  அவர் வழக்கம் போல் தனது அன்றாட வாழ்க்கையை வாழவும் தாம் பிரார்த்திப்பதாக பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.