ஷா ஆலம், ஜூலை 5: 2008 முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் உற்பத்தித் துறையின் மூலம் RM100.38 பில்லியன் அந்நிய முதலீட்டின் மதிப்பைப் சிலாங்கூர் பதிவு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட முதலீட்டின் மதிப்பு, குறிப்பிட்ட காலகட்டத்தில் 1,955 திட்டங்களை உள்ளடக்கிய 169,775 வேலை வாய்ப்புகளை வழங்கியது என மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (MIDA) அறிக்கையின் அடிப்படையில் முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

"தற்போது இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் 63 வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களைக் கண்காணித்து வருகிறது. அவை குத்தகை அல்லது கொள்முதல் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.

"திட்டங்கள் தளத்தைப் பார்வையிடும் கட்டத்திற்குச் சென்றுள்ளன. மொத்த முதலீட்டுத் திறன் சுமார் RM8 பில்லியன் ஆகும்" என்று இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இங் சீ ஹான் கூறினார்.

மார்ச் மாதம், மீடா கடந்த ஆண்டு சிலாங்கூரின் பதிவு செய்யப்பட்ட RM55.3 பில்லியன் முதலீட்டை அறிவித்தது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கான RM45 பில்லியனைத் தாண்டியது.

2022இல் RM12.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு RM19.3 பில்லியனாக உற்பத்தித் திட்டங்கள் அல்லது உற்பத்தித் துறை அதிகரித்துள்ளதாகவும் நிறுவனங்களின் தரவுகள் காட்டுகின்றன.

மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதலீட்டு மதிப்பாக RM50 பில்லியனை இலக்காக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கொண்டுள்ளார்.