ஷா ஆலம், ஜூலை 5: நாடு முழுவதும் 4,000 யூனிட் வணிக இடத்தை வழங்குவதன் மூலம் மைகிஷோக் (MyKiosk) 2.0 திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு அரசாங்கம் மொத்தம் RM100 மில்லியனை ஒதுக்கியது.
இத்திட்டம் பொது மைய புள்ளிகளில் அமைந்துள்ள சாதகமான, சீரான வணிக இடங்களை வழங்குவதன் மூலம் சிறு வணிகர்களின் பொருளாதார நிலையை மீட்டெடுத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி துணை அமைச்சர் கூறினார்.
கடந்த மாதம் நிலவரப்படி, 2,977 மைகிஷோக் யூனிட்களுக்கு RM74.4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள 83 பிபிடிகள் மூலம் வழங்கப்பட்டது என்று டத்தோ ஐமன் அதிரா சாபு கூறினார்
"இந்த திட்டம் சம்பந்தப்பட்ட சமூகத்தை மேம்படுத்தவும், செயல்பாடுகளை அதிகரிக்கவும், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது," என அவர் கூறினார்.
நேற்று மக்களவையில் மைகிஷோக் செயல்படுத்தலின் முன்னேற்றத்தை அறிய விரும்பிய தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் கப்டன் டத்தோ டாக்டர் சுல்காஃப்பெரி ஹனாவியின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், 3,189 மைகிஷோக்கள் பயன்படுத்தப்பட்டு, சிறு வியாபாரிகளிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
மைகிஷோக் 2.0இன் வடிவமைப்பு, உயர்தர பொருள் அமைப்பு மற்றும் சோலார் பேனல்களின் பயன்பாடு உள்ளிட்ட வணிக இடத்தை மேம்படுத்துவதில் பல அம்சங்களைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.


