NATIONAL

நான்கு  மாநகரங்களின் இணைப்பு ஆசிய நகரங்களுடன் போட்டியிடும் தன்மையை உருவாக்கும்

5 ஜூலை 2024, 7:36 AM
நான்கு  மாநகரங்களின் இணைப்பு ஆசிய நகரங்களுடன் போட்டியிடும் தன்மையை உருவாக்கும்

ஷா ஆலம், ஜூலை 5: நான்கு மாநகரங்கள் இணைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு (லெம்பா கிள்ளான் ராயா) தரமான பொதுவசதி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை கொண்டிருப்பதன் மூலம் முக்கிய ஆசிய நகரங்களுடன் போட்டியிடும் தன்மையைப் பெற முடியும்.

பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம், சுபாங் ஜெயா மற்றும் கிள்ளான் ஆகிய மாநகரங்களின் இணைப்பு பொருளாதார மற்றும் பொது வசதிகளை வலுப்படுத்த ஒரு பெருநகர மாதிரியாக மாறும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முதல் சிலாங்கூர் திட்டத்தின் மத்தியக் கால மதிப்பாய்வை முன்வைத்த அவர், பெருநகரத்துடன் தொடர்ந்து போட்டியிட 1970களிலிருந்து வளர்ச்சியடைந்த பகுதியின் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்துவதே இத்திட்டம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று விளக்கினார்.

"முன்னோக்கி நகர்வதில், மாநிலத்தின் பொருளாதாரத்தின் தளமாகவும் இயந்திரமாகவும் மாறியுள்ள இந்த பகுதியின் புத்துணர்ச்சி செயல்முறையை ஒன்றுபடுத்துவது முக்கிய சவாலாகும்.

"இத்திட்டம் ஆட்டோமேஷன் போன்ற உயர் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட தொழில்களுக்கான வாய்ப்பை வழங்கும்" என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.

உள்கட்டமைப்பு தொழில்நுட்பம், ஸ்மார்ட் போக்குவரத்து மேலாண்மை மற்றும் போக்குவரத்து முறைகளை தனியாரிடமிருந்து பொது நிலைக்கு மாற்றுவதற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு ஒரு சோதனை தளமாக இருக்கும் என்று அமிருடின் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.