ஷா ஆலாம், ஜூலை 5: வறுமைப் பிரச்சனையை இலக்காகக் கொண்டு சமாளிக்கும் தொடர் முயற்சிகளின் விளைவாக அது 0.7ல் இருந்து 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
இருப்பினும், 2025ல் இலக்கான 0.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2022ல் 1.5 சதவீதமாகப் பதிவான வறுமையின் அளவு அதிகமாக இருப்பதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விவரித்தார்.
"இலக்கை அடைய எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் உள்ளன என்பதை மாநில அரசு அறிந்திருக்கிறது. மேலும், சமூகத்தின் அனைத்து மட்டங்களின் சமூகப் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகிறது," என்று அவர் கூறினார்.
நேற்று சிலாங்கூர் மாநில சட்டசபையில் முதல் சிலாங்கூர் திட்டத்தின் (ஆர்எஸ்-1) மத்திய கால மதிப்பாய்வை முன்வைத்து அவர் இவ்வாறு கூறினார்.
நவீனப் பொருளாதாரத்தில் ஒப்பீட்டு வறுமை ஒரு முக்கிய குறியீடு, சிலாங்கூர் 2022 இல் 14.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025 இல் 11 சதவீதத்தை இலக்காகக் கொண்டுள்ளது என்றார்.
"இலக்கை அடைய, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறுமையை சமாளிக்க அதிக இலக்கு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் 2022 இல் தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவர நோக்கம் கொண்டு இருந்தாலும்,, முழுமையான மற்றும் ஒப்பீட்டு வறுமையைச் சமாளிக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் விரும்புகிறது என அமிருடின் கூறினார்.


