ஷா ஆலம், ஜூலை 4 - எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் மைபியூச்சர் ஜோப்ஸ் எஸ்க்ஸ் எம்பிஎஸ் கேரியர் கார்னிவெல் நிகழ்வை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
செலாயாங் நகராண்மைக்கழக மெனாரா எம்பிஎஸ் கட்டிட முகப்படத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வேலை வாய்ப்பு விழா நடைபெற உள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு, குறிப்பாக கோலாலம்பூர் சுற்று வட்டாரத்திலுள்ளவர்களுக்கு நற்செய்தி. சமூக பாதுகாப்பு நிறுவனத்துடன் (பெர்க்கேசோ) இணைந்து எம்பிஎஸ் எதிர்வரும் சனிக்கிழமை வேலை வாய்ப்பு திருவிழாவை ஏற்பாடு செய்யவுள்ளது.
நேர்காணலுக்கு வருவோர் நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் உடையணிந்து வர அறிவுறுத்தப்படுகிறார்கள். சுயவிபரக் குறிப்பு, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல் போன்ற ஆவணங்களைக் கொண்டு வரவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று எம்பிஎஸ் தனது முகநூலில் தெரிவித்துள்ளது.
இந்த வேலை வாய்ப்பு விழாவில் பங்கேற்கும் நிறுவனங்களில் ஏயோன் பெர்ஹாட், கார்சோம் சென்.பெர்ஹாட், ஷாரிக் பிரிண்டர்ஸ் சென்.பெர்ஹாட், விட் ஃபூட்ஸ் சென். பெர்ஹாட் ஆகியவையும் அடங்கும்.
இந்த வேலை வாய்ப்பு விழாவிற்கு மக்கள் வருவதை எளிதாக்குவதற்காக ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவைகளும் ஜாலான் எம்பிஎஸ்1 தடத்தில் வழங்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளோர் https://bit.ly/
மேல் விபரங்களுக்கு 019-611 5473 (திவ்யா) அல்லது 019-698 4750 (அஸ்ரின்) ஆகியோரை அழைக்கலாம்.


