NATIONAL

லம்போர்கினி கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் ஒருவர் இறந்தார்

1 ஜூலை 2024, 4:51 AM
லம்போர்கினி கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் ஒருவர் இறந்தார்

ஷா ஆலம், ஜூலை 1: நேற்று காலை ஜாலான் பெந்தோங்-காரக்கின் கிலோமீட்டர் 57.1

இல் லம்போர்கினி கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் ஒருவர் இறந்தார்.

இச்சம்பத்தில் சிக்கிய பெண் பயணி ஒருவரை பொதுமக்கள் வெற்றிகரமாகக்

காப்பாற்றினர் என பகாங் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி

இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கானி கூறினார்.

“காலை 9 மணியளவில் நடந்த இந்த விபத்தில், சிக்கிக் கொண்ட ஓட்டுனர்

இறந்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ அதிகாரி

உறுதிப்படுத்தினார்.

விபத்தில் அக்கார் முற்றிலும் எரிந்துவிட்டது" என்று பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.