NATIONAL

போக்குவரத்துக் குற்றங்களுக்கான புதிய அபராதக் கட்டணம்

29 ஜூன் 2024, 4:56 AM
போக்குவரத்துக் குற்றங்களுக்கான புதிய அபராதக் கட்டணம்

கோலாலம்பூர், ஜூன் 29: சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (சட்டம் 333) மற்றும் சட்டம் 333ன் கீழ் அனைத்து துணைச் சட்டங்களின் மூலம் போக்குவரத்துக் குற்றங்களுக்கான புதிய அபராதக் கட்டணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 1) முதல் கோலாலம்பூர் நகர மன்றம் (டிபிகேஎல்) நடைமுறைப் படுத்தவுள்ளது.

அபராதக் கட்டணங்கள் அனைத்தும் வாகனங்களின் வகை மற்றும் அபராதத்தைச் செலுத்த எடுத்து கொள்ளும் காலம்  ஆகியவற்றிற்கு ஏற்றவாறு மாறுப் படும் என டிபிகேஎல் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது.

மோட்டார் சைக்கிள் வகைக்கான அபராதக் கட்டணம் ஒன்று முதல் 15 நாட்கள் வரை RM30, 16 முதல் 30 நாட்கள் வரை RM50 மற்றும் 31 முதல் 60 நாட்கள் வரை RM80 என டிபிகேஎல் தெரிவித்துள்ளது.

கார் வகைக்கு, ஒன்று முதல் 15 நாட்கள் வரையிலான கட்டண காலத்திற்கு RM50, 16 முதல் 30 நாட்களுக்கு RM80 மற்றும் 31 முதல் 60 நாட்களுக்கு RM100 என அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.