NATIONAL

குகைக்குள் சிக்கி கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

21 ஜூன் 2024, 4:20 AM
குகைக்குள் சிக்கி கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

ஈப்போ, ஜூன் 21: நேற்று சாம் போ தோங் குகைக்குள் சிக்கி கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை (ஜோடி) பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) வெற்றிகரமாக மீட்டது.

இச்சம்பவம் குறித்து அக்குகைக்குள் சிக்கிய ஒருவரிடமிருந்து தனது தரப்பு பிற்பகல் 2.26 மணிக்குப் புகார் பெற்றதாகப் பேராக் ஜேபிபிஎம் செயல் பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.

“சீன ஆணும், தென் கொரிய பெண்ணும் குகைக்குள் பத்திரமாக இருந்ததாகவும், குகையின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டதால் அவர்கள் சிக்கிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது” என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், 30 வயது மதிக்கத்தக்க இருவருக்குமே காயம் ஏதும் ஏற்படவில்லை என்றார்.

"சுமார் 30 நிமிடங்களில் மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது. குகைக் கதவு பாதுகாப்புக் காவலர்களால் மீண்டும் திறக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.