NATIONAL

விரைவுப் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது

21 ஜூன் 2024, 3:20 AM
விரைவுப் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது

லஹாட் டத்து, ஜூன் 21: நேற்றிரவு  9 வது மைல்  ஜாலான் சிலாம் எனும் இடத்தில் விரைவுப் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இரவு 9.24 மணிக்கு நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக சபா மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

"லஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சம்பவம் இடத்திற்கு ஏழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர்" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும், இச்சம்பவம் குறித்து தகவல்கள் அவ்வப்போது புதுபிக்கப்படும்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.