NATIONAL

இரண்டு லட்சம் வெள்ளியை கையாடல் செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டு ஆலோசகர் மீது குற்றச்சாட்டு

14 ஜூன் 2024, 9:33 AM
இரண்டு லட்சம் வெள்ளியை கையாடல் செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டு ஆலோசகர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூன் 14 - கலை நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட

நிறுவனத்திற்குச் சொந்தமான 200,000 வெள்ளியை சொந்த நோக்கத்திற்காகப்

பயன்படுத்தியதாக கலைநிகழ்ச்சி ஏற்பாட்டு ஆலோசகர் ஒருவர் மீது

இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி அஸ்ருள் டாருள் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட

குற்றச்சாட்டை ரபியாத்துல் அடாவ்வியா இஸாடின் (வயது 33) என்ற

நிகழ்ச்சி ஏற்பாட்டு ஆலோசகர் மறுத்து விசாரணை கோரினார்.

“கோயாங் அசி கோப்ளோ மிலேனியா“ எனும் கலைநிகழ்ச்சியை ஏற்பாடு

செய்வதற்காக மிஷன் சைட் சென். பெர்ஹாட் நிறுவனம் வழங்கிய 237,370

வெள்ளியை நிகழ்ச்சிக்காக அல்லாமல் தனது சொந்த தேவைக்காகப்

பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி புக்கிட் கியாரா,

இக்குஸ்ட்ரியன் திடலில் இக்குற்றத்தைப் புரிந்ததாக ரபியாத்துலுக்கு

எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் முதல் ஐந்தாண்டுகள்

வரையிலான சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை

செய்யும் குற்றவியல் சட்டத்தின் 403வது பிரிவின் கீழ் அவர்

குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை 20,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அரசுத் தரப்பு

துணை வழக்கறிஞர் முகமது அய்மான் அஸ்ஹான் நீதிமன்றத்திடம்

பரிந்துரைத்தார். எனினும், தனது கட்சிக்காரருக்கு நான்கு பிள்ளைகள்

உள்ளதோடு கணவர் திவாலானவர் என்பதால் பணப்பிரச்சனையையும்

எதிர்நோக்கியுள்ளதால் குறைவான ஜாமீன் தொகையை நிர்ணயிக்கும்படி

ரபியாத்துலின் வழக்கறிஞர் பெர்னட் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 12,000 வெள்ளி

ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி இந்த வழக்கு

விசாரணையை எதிர்வரும் ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.