NATIONAL

நெடுஞ்சாலை ஓய்வுப் பகுதியின் கழிப்பறையில் போலீஸ்காரர் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு

14 ஜூன் 2024, 9:27 AM
நெடுஞ்சாலை ஓய்வுப் பகுதியின் கழிப்பறையில் போலீஸ்காரர் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு

சிரம்பான், ஜூன் 14 - இங்குள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஓய்வுப் பகுதியில்

உள்ள கழிப்பறையில் போலீஸ்காரர் ஒருவர் இறந்த நிலையில்

கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.45 மணியளவில் பொது

மக்களிடமிருந்து தாங்கள் தகவலைப் பெற்றதாக நீலாய் மாவட்ட போலீஸ்

தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹசிம் கூறினார்.

இருபத்தைந்து வயதுடைய அந்த போலீஸ்காரர் திருமணமானவர் என்பது

தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறிய அவர்,

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றும் காவலர் என்பது

உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

நெகிரி செம்பிலான் மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் தடயவியல்

துறை சம்பவ இடத்தில் மேற்கொண்ட சோதனையில் அந்த ஆடவரின்

உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தது என்று

அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இறந்த

நபரின் உடல் சவப்பரிசோதனைக்காகத் துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்குக்

கொண்டுச் செல்லப்பட்டது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.