NATIONAL

கணவனால் தாக்கப்பட்ட மனைவி மரணம்

13 ஜூன் 2024, 3:48 AM
கணவனால் தாக்கப்பட்ட மனைவி மரணம்

ஈப்போ, ஜூன் 13: கம்போங் சிமியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தில், கணவனால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி உறுதி செய்துள்ளார். இந்த வழக்கு ஈப்போ மாவட்ட காவல்துறையால் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

"இந்தச் சம்பவத்தை நான் உறுதிப்படுத்துகிறேன், ஈப்போ OCPDயிடம் (ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட்) முழு விசாரணை விவரங்களையும் கோருகிறேன். ஏனெனில், அவர்கள் அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வருகின்றனர், இன்னும் விசாரணையில் உள்ளனர்," என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.

சந்தேகநபர் குற்றத்தில் பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தி மற்றும் காரின் பொருட்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

முன்னதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த சம்பவம் ஆரம்பமாகியது ஊடகங்கள் தெரிவித்தன.

அந்த பெண் அடிக்கடி குடும்ப வன்முறைக்கு ஆளாவதாக நம்பப்படுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.