NATIONAL

நச்சு உணவால் ஏற்பட்ட மரணம் தொடர்பான விசாரணையில் 8 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது

12 ஜூன் 2024, 9:29 AM
நச்சு உணவால் ஏற்பட்ட மரணம் தொடர்பான விசாரணையில் 8 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது

கோலாலம்பூர், ஜூன் 12: கடந்த திங்கட்கிழமை நச்சு உணவால் ஏற்பட்ட 17 வயது சிறுவன் மற்றும் இரண்டு வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணையில் 8 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் குறிப்பிட்ட மதப் பள்ளிக்கு உணவு வழங்கியவர்களின் வாக்குமூலங்களும் இதில் சேர்க்கப் பட்டுள்ளன என கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் அரிஃபின் முகமட் நசீர் கூறினார்.

மதப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உணவு உண்டதன் விளைவாக பாதிக்கப்பட்ட மற்ற நபர்களையும் காவல்துறையினர் அடையாளம் கண்டு வருவதாக அவர் கூறினார்.

"எதிர்காலத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பள்ளி தலைமையாசிரியர், மற்றும் உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிற நபர்களையும் வாக்குமூலம் பெற காவல்துறை அழைக்கும்" என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 82 நபர்கள் நச்சு உணவு தொடர்பான அறிகுறிகளை அனுபவித்ததாகச் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் உம்மி கல்தோம் ஷம்சுடின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.