NATIONAL

ஜாலான் டூத்தாவில் விரைவு பேருந்து சாலைத் தடுப்பை மோதியது- எழுவர் காயம்

12 ஜூன் 2024, 3:32 AM
ஜாலான் டூத்தாவில் விரைவு பேருந்து சாலைத் தடுப்பை மோதியது- எழுவர் காயம்

கோலாலம்பூர், ஜூன் 12- விரைவு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து

சாலைத் தடுப்பை மோதியதில் அதன் ஓட்டுநர் உள்பட எழுவர்

காயமடைந்தனர். இச்சம்பவம் தலைநகர், ஜாலான் டூத்தா டோல் சாவடிக்கு

அருகே கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் தடத்தில் இன்று அதிகாலை

நிகழ்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 6.17 மணியளவில் தாங்கள்

அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்

உயர் நடவடிக்கை கமாண்டர் 11, முகமது யூஸ்ரி அஜிஸ் கூறினார்.

மஞ்சாலாரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து நான்கு

பேரடங்கிய தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக

அவர் சொன்னார்.

அந்த பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளையும் தீயணைப்பு வீரர்கள்

பாதுகாப்பாக வெளியேற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்த பயணிகள் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக சுகாதார

அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர் அறிக்கை

ஒன்றில் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.