NATIONAL

மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை- கணவர் விசாரணைக்காகத் தடுத்து வைப்பு

10 ஜூன் 2024, 4:38 AM
மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை- கணவர் விசாரணைக்காகத் தடுத்து வைப்பு

ஷா ஆலம், ஜூன் 10- கிள்ளானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்

ஆடவர் ஒருவர் தன் மனைவியைக் கழுத்தை அறுத்து படுகொலை

செய்தார்.

உள்நாட்டவரான அந்த 28 வயதுப் பெண் கட்டிலில் கழுத்து மற்றும்

வலது கை கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில் கிடந்ததாகத் தென்

கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபூங் கூறினார்.

கடந்த ஜூன் 7ஆம் தேதி காலை 7.58 மணியளவில் காவல் துறையைத்

தொடர்பு கொண்ட சந்தேக நபரின் சகோதரர், தனது தம்பி அவரின்

மனைவியைக் கொலை செய்த தகவலைத் தெரிவித்தார் என அவர்

சொன்னார்.

ஈராண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டது முதல்

அத்தம்பதியரிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது தொடக்கக் கட்ட

விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில்

தெரிவித்தார்.

அப்பெண்ணின் உடல் மீது மேற்கொள்ளப்பட்ட சவப்பரிசோதனையில்

உடலின் 12 இடங்களில் கீறல்களும், காது, உதடு, தாடை கழுத்து,

தோள்பட்டை, கை, விரல் மற்றும் தலையில் வெட்டுக காயங்களும்

இருப்பது கண்டறியப்பட்டது என்றார் அவர்.

ஆறு மாதக் குழந்தைக்கு தாயான அந்த மாதுவுக்கு ஏற்பட்ட மரணத்திற்கு

கழுத்து அறுக்கப்பட்டதால் மூச்சுக் குழாய் மற்றும் கழுத்து எலும்பு

துண்டிக்கப்பட்டதே காரணம் என்று அவர் சொன்னார்.

சம்பவம் நிகழ்ந்த அன்றைய தினமே கைது செய்யப்பட்ட லோரி ஓட்டுநரான சந்தேகப் பேர்வழி வரும் 14ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது

பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர்

மேலும் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.