NATIONAL

சீ கிண்ண ஸ்குவாஷ் போட்டியில் சஞ்சய் ஜீவா, சவீத்ரா தங்கம் வென்றனர்

10 ஜூன் 2024, 2:22 AM
சீ கிண்ண ஸ்குவாஷ் போட்டியில் சஞ்சய் ஜீவா, சவீத்ரா தங்கம் வென்றனர்

கோலாலம்பூர், ஜூன் 10 - தென்கிழக்காசிய   கிண்ண (சீ) ஸ்குவாஷ் வெற்றியாளர் போட்டியின் கலப்பு குழு பிரிவில் வளர்ந்து வரும் இளம் விளையாட்டாளர்களான  சஞ்சய் ஜீவா மற்றும் கே.சவீத்ரா ஆகியோர் உபசரணைக் குழுவான பிலிப்பைன்சை 2-0 புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றனர்.

கடந்த புதன்கிழமை (ஜூன் 5) மணிலாவில் உள்ள ரிசால் நினைவு விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற போட்டியில்    டேவிட் பெலினோவை 11-5, 11-8, 11-7 என்ற செட் கணக்கில் 24 நிமிடங்களில்  வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பட்டத்தை  சஞ்சய் வென்றார்.    அதே நேரத்தில் சக ஆட்டக்காரரான சவீத்ரா  ஜெமிகா அரிபடோவை 28 நிமிடங்களில் 11-1, 12-10, 11-5 என்ற புள்ளிகளில்  வீழ்த்தி  பட்டத்தை உறுதி செய்தார்.

சக அணி வீரர்களான முகமது ஹபீஸ் அப்துல் ஜாஃப்ரி அப்துல் ஹரிஃப், டங்கன் லீ மற்றும் மகளிர் வீராங்கனை ஜே. யாஷ்மிதா ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.

எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். ஆனால் சிறிது  அழுத்தம் இருந்ததால்  சில எளிதான புள்ளிகளை பறிகொடுக்க நேர்ந்தது. இது, எனது எதிரணி ஆட்டக்காரர் என்னைப் பின்தொடர வாய்ப்பை ஏற்படுத்தியது. ஆயினும், இன்னும் சிறப்பாக விளையாடி நேர் செட்களில் வெற்றி பெற முடிந்தது என சவீத்ரா கூறினார்.

இதனிடையே, ஆண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு அணி தங்கப் பதக்கங்களைப் பெற்ற வேளையில்  மலேசியாவின் ஐனா அமானி அம்பாண்டி மகளிர் ஒற்றையர் கிரீடத்தையும் கைப்பற்றினார்.மேலும்,  ஓங் சாய் ஹங்-ஐனா கலப்பு இரட்டையர் வெற்றியாளர்  பட்டத்தை கைப்பற்றினர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் முறையே ஓங் மற்றும் சான் யுவென் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.