ECONOMY

மலேசிய முஸ்லிம்கள் ஜூன் 17ஆம் தேதி ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுவர்

8 ஜூன் 2024, 3:45 AM
மலேசிய முஸ்லிம்கள் ஜூன் 17ஆம் தேதி ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுவர்

கோலாலம்பூர், ஜூன் 8-  மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் வரும் ஜூன் 17 ஆம் தேதி ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுவர்  என்று ஆட்சியாளர்கள் மன்றத்தின் உதவிச் செயலாளர்  டத்தோ முகமது அசெரல் ஜஸ்மான் தெரிவித்தார்.

மேலும், 1 ஜுல்ஹிஜ்ஜா 1445 ஹிஜ்ரத் இன்று அனுசரிக்கப்படும்  என்று ஆர்.டி.எம். தொலைக்காட்சி வழி  வெளியிட்ட அறிவிப்பில் அவர் தெரிவித்தார்.

ஆட்சியாளர்களின் ஒப்புதலுடன் மாட்சிமை தங்கிய பேரரசர் இட்டுள்ள ஆணைக்கேற்ப  1 ஜுல்ஹிஜ்ஜா 1445 ஹிஜ்ரத் ஜூன் 8ஆம் தேதி அனுசரிக்கப்படும் என்பதை அரச முத்திரைக் காப்பாளரின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, மலேசியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கான  தியாகத் திருநாள் (10 ஜுல்ஹிஜா) கி.பி. 17 ஜூன் 2024 திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.