ECONOMY

இன்றும் நாளையும்  எட்டு  இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

8 ஜூன் 2024, 3:03 AM
இன்றும் நாளையும்  எட்டு  இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூன் 8-   மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்றும் நாளையும் மேலும் எட்டு இடங்களில் காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை  நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேமபாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) மேற்கொள்ளப்படும் இந்த விற்பனை தெலுக் நிப்பா சமூக மண்டபம் (கோலக் கிள்ளான்),  சுங்கை பூலோ சிறைச் சாலை ஊழியர்கள் குடியிருப்பு ( ஈஜோக்), கம்போங் சுங்கை புவா பொது மைதானம் (டெங்கில்) டத்தாரான் அட்தெக் (சுங்கை காண்டிஸ்) ஆகிய இடங்களில் நடைபெறும்.

மேலும், பங்சாபுரி ஆரிக்ஸ்டா பண்டார் பார்க்லண்டஸ் ( கோலக் கிள்ளான்), டேவான் ஸ்ரீ நக்கோடா (சுங்கை ஆயர் தாவார்),  சூராவ் ஹாஜி மாட் சோம் (மேரு), கெடாய் நாசி கண்டார் இம்ரான் சுபாங் பிஸ்தாரி ( கோத்தா டாமன்சாரா) ஆகிய இடங்களிலும் இந்த மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும்  5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ அரிசி  13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில்  செகி ஃப்ரெஷ் பேரங்காடியுடன் இணைந்து நடத்தப்படும் மலிவு விற்பனை நீங்கலாக  இவ்வாண்டு 1,800க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மலிவு விற்பனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது  .

இந்த மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். முகநூல் வழி மற்றும் விற்பனைச் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது http://linktr.ee/myPKPS இணைப்பின் மூலமாகவும் சரிபார்க்கலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.