NATIONAL

இந்திய தொழில்முனைவோருக்கான ரக்யாட் வங்கியின் உதவித் திட்டம்

7 ஜூன் 2024, 8:00 AM
இந்திய தொழில்முனைவோருக்கான ரக்யாட் வங்கியின் உதவித் திட்டம்

கோலாலம்பூர், ஜூன் 6 : இந்திய தொழில்முனைவோருக்கான பேங் ரக்யாட்டின் நிதியுதவித் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (PMKS) நடத்தும் இந்திய தொழில் முனைவோருக்கு மூலதனத்தை வழங்குவதற்காக RM50 மில்லியனை அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும், ஒட்டுமொத்த மலேசிய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக 70 ஆண்டுகள் இயங்கி வரும் ரக்யாட் வங்கியின் அர்ப்பணிப்புக்கு இந்த திட்டம் ஒரு சான்றாகும் என்று தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம் பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

மேலும், இந்திய சமூகத்திடையே தீவிர வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் விருப்பத்தை அடைய இது ஒரு வாய்ப்பாகும். இதனால் செழிப்பான மற்றும் நாகரிகம் நிறைந்த மலேசியாவில் பொருளாதார இடைவெளியைக் குறைக்க முடியும்.

"அதுமட்டுமில்லாமல், இது இந்திய சமூக தொழில்முனைவோருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய ஒரு திட்டமாகும்.

"இந்திய சமூகத்தின் தொழில்முனைவோரை ஆதரிப்பதன் மூலம், அனைவருக்குமான மிகவும் மாறுபட்ட, நெகிழ்ச்சியான மற்றும் வளமான பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

" சந்தையில் உள்ள மற்ற நிதியளிப்பு திட்டங்களுடன் ஒப்பிடும்போது இத்திட்டம் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அவற்றில் குறு நிறுவனங்களுக்கு RM1000 முதல் RM50000 வரையிலான நிதி வரம்புடன் ஆண்டுக்கு 6.50 சதவீதம் வட்டியில் வழங்கப்படுகிறது.

வருடத்திற்கு அடிப்படை நிதி விகிதம் (KAP) +0.67 சதவிகிதம் ஆகும். இதில் உத்தரவாதக் கட்டணம் RM50001 முதல் RM1 மில்லியன் வரை இருக்கும்.

விண்ணப்ப ஒப்புதல் செயல்முறைக்கு 14 வேலை நாட்கள் மட்டுமே ஆகும் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.