NATIONAL

பதினைந்து வயது பெண் மானபங்கம்- விசாரணைக்காக மருத்துவர் தடுத்து வைப்பு

7 ஜூன் 2024, 4:39 AM
பதினைந்து வயது பெண் மானபங்கம்- விசாரணைக்காக மருத்துவர் தடுத்து வைப்பு

ஈப்போ, ஜூன் 7- பதினைந்து வயது பெண் ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக மருத்துவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அந்த பதின்ம வயதுப் பெண் கடந்த 4ஆம் தேதி இரவு 9.14

மணியளவில் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து கடந்த புதன்

கிழமை அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டதாகப் பேராக் தெங்கா

மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹபிஸூல் ஹெல்மி

கூறினார்.

மருத்துவமனை ஒன்றின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுக்

கொண்டிருந்த போது தன்னை அம்மருத்துவர் பாலியல் ரீதியாகப்

பலாத்காரம் செய்ததாக அப்பெண் போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக

அவர் சொன்னார்.

இந்த புகார் தொடர்பில் 2017ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல்

குற்றச் சட்டத்தின் 14(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு

வருவதாக கூறிய அவர், இந்த சம்பவம் தொடர்பில் தகவல்

அறிந்தவர்கள் காவல் துறையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்

கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.