NATIONAL

பொழுதுபோக்கு பூங்காவில் ஆட்டிஸம் சிறுமி நீரில் மூழ்கி மரணம்

5 ஜூன் 2024, 7:03 AM
பொழுதுபோக்கு பூங்காவில் ஆட்டிஸம் சிறுமி நீரில் மூழ்கி மரணம்

கப்பளா பாத்தாஸ், ஜூன் 5 - ஆட்டிஸம் குறைபாடு கொண்ட ஐந்து வயதுச்

சிறுமி இங்குள்ள பெர்த்தாம் நீர் பொழுதுபோக்கு பூங்காவில் மூழ்கி

உயிரிழந்தார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் குடும்பத்தாருடன் அந்த பொழுதுபோக்கு

மையத்தில் குளித்துக் கொண்டிருந்த போது தங்கள் மகள் திடீரென

பார்வையிலிருந்து மறைந்து விட்டதாக அவரின் தாயார் கூறினார் என்று

செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜூல்கிப்ளி சுலைமான்

தெரிவித்தார்.

அந்த மாது உடனடியாக இவ்விஷயத்தை அந்த பூங்காவிலிருந்த

பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அச்சிறுமியைத் தேடிய அவர்கள்

கட்டுமானத்தில் இருந்து வரும் குளம் ஒன்றில் அச்சிறுமியின் உடலைக்

கண்டுள்ளனர் என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்ட போது

சொன்னார்.

இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த குளத்தில் சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு

நீர் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அச்சிறுமியின் உடல் மீது இங்குள்ள கப்பளா பாத்தாஸ்

மருத்துவமனையில் சவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டப் பின்னர்

அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.