NATIONAL

விழுந்து கிடந்த மரத்தில் மோதிய கார்கள்- ஐவர் உயிர் தப்பினர்!

5 ஜூன் 2024, 3:06 AM
விழுந்து கிடந்த மரத்தில் மோதிய கார்கள்- ஐவர் உயிர் தப்பினர்!

ஷா ஆலம், ஜூன் 5 - நேற்று ஜாலான் காப்பார் பத்து 6, கிள்ளான் பகுதியில் விழுந்து கிடந்த மரத்தில் இரண்டு கார்கள் மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிர் தப்பினர்.

இச்சம்பவம் தொடர்பாக மாலை 3.10 மணிக்கு அவர்களுக்கு அழைப்பு வந்ததை அடுத்து, வடக்கு கிள்ளான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கைகளின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

"இரண்டு குழந்தைகள் உட்பட அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் காயமின்றி உயிர் தப்பினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே அவர்கள் தங்கள் கார்களை விட்டு வெளியேறினர்," என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர் என முக்லிஸ் மேலும் கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.