மலாக்கா, ஜூன் 4- மலாக்கா யாங் டிபெர்த்துவா நெகிரியாக துன் முகமது அலி ருஸ்தாம் இரண்டாம் தவணைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்குள்ள காம்ப்ளெக்ஸ் ஸ்ரீ நெகிரியில் உள்ள சடங்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மலாக்கா உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அன்செல்ம் சார்ல்ஸ் பெர்ணாடிஸ் மற்றும் மாநில செயலாளர் பொறுப்பை வகிக்கும் மாநில நிதி அதிகாரி டத்தோ சல்ஹா சாலே ஆகியோர் முன்னிலையில் அவர் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ராவுப் யூசோ, அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ஜூரியா அப்துல் அஜிஸ், மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ இப்ராஹிம் டாரும், மலாக்கா உயர்நீதிமன்ற நீதிபதி முகமது ராட்ஸி அப்துல் ஹமிட், கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோஸ்ரீ முகமது ஃபிராவ்ஸ் ஜப்ரில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மலாக்கா ஆளுநருக்கான நியமனம் கடிதத்தை முகமது அலி கடந்த மே 28ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் மேன்மை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
கடந்த 2020 ஜூன் 4ஆம் தேதி மலாக்கா மாநிலத்தின் ஆளுநராக முதல் தவணைக்கு துன் அலி ருஸ்தாம் (வயது 75) நியமிக்கப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியை வகிப்பார்.


