ECONOMY

நாளை நான்கு இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

3 ஜூன் 2024, 12:48 PM
நாளை நான்கு இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை
நாளை நான்கு இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூன் 3-  நாளை காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை மேலும் நான்கு இடங்களில் மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தினால்  (பி.கே.பி.எஸ்.) மேற்கொள்ளப்படும் இந்த விற்பனை தாமான் டேசா குண்டாங் (குவாங்), பாலாய் கெராயோங் எம்.பி.கே.கே.2, (செமெந்தா), ஜாலான் எஸ்.எஸ்.9/10 (ஸ்ரீ செத்தியா), வெள்ளிக்கிழமை சந்தை வளாகம் (சுங்கை ஆயர் தாவார்) ஆகிய இடங்களில் நடைபெறும்.

இந்த விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும்  5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ அரிசி  13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில்  செகி ஃப்ரெஷ் பேரங்காடியுடன் இணைந்து நடத்தப்படும் மலிவு விற்பனை நீங்கலாக  இவ்வாண்டு 1,800க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மலிவு விற்பனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது  .

இந்த மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். முகநூல் வழி மற்றும் விற்பனைச் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது http://linktr.ee/myPKPS இணைப்பின் மூலமாகவும் சரிபார்க்கலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.