ECONOMY

கோலாலம்பூர் வருமான வரி வாரிய அலுவலகம் இனி ஜாலான் துவாங்கு அப்துல் ஹலிம் அரசு வளாகத்தில் செயல்படும்

2 ஜூன் 2024, 7:45 AM
கோலாலம்பூர் வருமான வரி வாரிய அலுவலகம் இனி ஜாலான் துவாங்கு அப்துல் ஹலிம் அரசு வளாகத்தில் செயல்படும்

புத்ராஜெயா, ஜூன் 2-  உள்நாட்டு வருவாய் வாரியத்தின்  கோலாலம்பூர் கிளை அலுவலகம் இப்போது ஜாலான் துவாங்கு அப்துல் ஹலீம் அரசு வளாகத்தில் புதிய இடத்தில் இயங்கி வருகிறது.

கோலாலம்பூர் மெனாரா ஒலிம்பியாவில் உள்ள அலுவலகம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாக உள்நாட்டு வரைமான வரி வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

வருமான வரி தொடர்பான கடிதங்களை   LHDN Kuala Lumpur, Karung Berkunci 00010, Pejabat Pos Besar, 50990 Kuala Lumpur.  என்ற புதிய முகவரிக்கு அனுப்பப்பலாம் என்று அவ்வாரியம் குறிப்பிட்டது.

வரி செலுத்துவோர் தங்கள் பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலகம் மூடப்படுவது தொடர்பான   அறிவிப்பை வருமான வரி வாரியம் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியிட்டிருந்தது.

வரி செலுத்துவோர் புடு சென்ட்ரலில் உள்ள வருமான வரி வாரியத்தின் அலுவலகம் அல்லது அருகிலுள்ள  அலுவலகங்களுக்குச் செல்லலாம் அல்லது ஐ.ஆர்.பி. அகப்பக்கம்  மூலம் வருகைக்கான முன்பதிவை இணையம் வழி மேற்கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.