NATIONAL

சிலாங்கூரில் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் மேலும் 10 உறுப்பினர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

29 மே 2024, 7:31 AM
சிலாங்கூரில் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் மேலும் 10  உறுப்பினர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர், மே 29- சிலாங்கூரில் நிகழ்ந்த பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் திட்டமிட்ட  குற்றச் செயல் கும்பலின் மேலும் பத்து உறுப்பினர்களை அரச மலேசிய  போலீஸ் படைத் தேடி வருகிறது.

கேங் 08, கோங் 18, கேங் 21, கேங் 24 மற்றும் கேங் 36 ஆகியவற்றை

உள்ளடக்கிய டி.ஆர். என அக்கும்பல் அறியப்படுகிறது என்று புக்கிட்

அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது

சுஹைலி முகமது ஜைன் கூறினார்.

இந்த கும்பல் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தீவிரமாகச் செயல்பட்டு

வந்துள்ளது. இக்கும்பல் போதைப் பொருள் கடத்தல், மிரட்டிப் பணம்

பறித்தல், கொலை, தீயிடல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது

காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர்

தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 3ஆம் தேதி ஓப்ஸ் லீமா என்ற பெயரில் சிலாங்கூர்,

ஜோகூர், பகாங் ஆகிய மாநிலங்களில் போலீசார் அதிரடிச் சோதனையை

மேற்கொண்டு 26 முதல் 51 வயது வரையிலான 18 திட்டமிட்ட குற்றச்

செயல் கும்பல் உறுப்பினர்களை சொஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டு

பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் (சிறப்பு நடவடிக்கைகள்) கீழ் தடுத்து

வைத்துள்ளனர் என்றார் அவர்.

தற்போது சுங்கை பூலோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இதே

கும்பலின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை நாங்கள்

அடையாளம் கண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

அவர்களில் 20 பேர் இன்று காலை கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில்

தண்டனைச் சட்டத்தின் 130வி பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

என்றும் அவர் சொன்னார்.

தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் சிகிச்சைப் பெற்று வருவதால்

அவர்களில் ஒருவருக்கு எதிராக இன்று குற்றஞ்சாட்டப் படவில்லை என்று

அவர் தெரிவித்தார்.

குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக இத்தகைய கும்பல்களுக்கு எதிரான

நடவடிக்கைகளை காவல் துறை தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்றும்

அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.