ECONOMY

 நிச்சயமற்ற உலகப் பொருளாதார நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்  நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி

21 மே 2024, 5:40 PM
 நிச்சயமற்ற  உலகப் பொருளாதார நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்  நாடு  அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி

கோலாலம்பூர்  மே 22 ;- உலகப் பொருளாதாரத்தின்  நிச்சயமற்ற நிலையிலும், 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்   நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையைப் பற்றி கூறிய பிரதமர்  இந்த  2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த நாட்டின் பொருளாதாரச் சாதனைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன  என்றார்.

2024 முதல் காலாண்டில், 4.2% என்ற விகித பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம்; இது 3.9% என்று கணிக்கப்பட்ட பெரும்பாலான கட்சிகளின் மதிப்பீட்டை விட அதிகமாகும்.

உலகப் பொருளாதார  நிச்சயமற்ற நிலையிலும், 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்

நாடு , ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் உயர்ந்த வளர்ச்சியை எட்டியது ஊக்கமளிப்பதாக  குறிப்பிட்டார்.

அவற்றில்:

● தொழிலாளர் சந்தை 2.1% வளர்ச்சியடைந்து மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 16.4 மில்லியனாக அதிகரித்துள்ளது.

● 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 1.6% ஆகப் பணவீக்கம் கட்டுப்பாட்டில்  இருந்தது.

● 2024 இன் முதல் நான்கு மாதங்களில், மலேசியாவின் மொத்த வர்த்தகம் 8.3% அதிகரித்து RM912.27 பில்லியனாக உள்ளது. நாம்  RM 41.83 பில்லியன் வர்த்தக உபரியைப்  பெற்றோம்.

● மேலும் பெருமை என்னவென்றால், 1,600 புள்ளிகளைக் கடந்த FBM கோலாலம்பூர் பங்குச்சந்தை  நிலையை எட்டியுள்ளோம், மேலும் உள்நாட்டு பங்குச் சந்தையின் மதிப்பு வரலாற்றில் RM2 டிரில்லியன் என்ற மிக உயர்ந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.

இந்த மைக்ரோ பொருளாதாரச் சாதனையை நாம் ஒன்றாக  ஏற்றுக் கொண்டாட படவேண்டிய ஒன்று, ஆனால் அதிகமான  மக்களின்  கவனத்தை  வாழ்வாதாரத்தின்  தற்போதைய சுமைகள்  ஈர்ப்பதை  நான் ஒப்புக்கொள்கிறேன். இது நிஜம், இதை நான் மறுக்க விரும்பவில்லை என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.