NATIONAL

பாங் சோக் தாவோவின் வெற்றி ஒற்றுமை அரசாங்கத்தின் மீதான மலாய் வாக்காளர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது

21 மே 2024, 8:14 AM
பாங் சோக் தாவோவின் வெற்றி ஒற்றுமை அரசாங்கத்தின் மீதான மலாய் வாக்காளர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது

உலு சிலாங்கூர், மே 21: பாங் சோக் தாவோவின் வெற்றியானது, கோலா குபு பாருவில் மலாய் வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.

சோக் தாவோ வெற்றி பெற்ற சுங்கை ஆயர் ஜெர்னே, கெர்லிங் மற்றும் பெரேதாக் பகுதிகள் மலாய் சமூகத்தின் வாக்குகளின் அடையாளம் என்று சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் பெற்ற வாக்கு வீதம் அதிகரித்தமை பெருமைக்குரிய சாதனை எனவும் அமிருடின் வர்ணித்துள்ளார்.

"பக்காத்தான் பெற்ற வாக்கு சதவீதம் மூன்று சதவீதமாக கூடி பதிவாகியுள்ளது. முடிந்த மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) நாங்கள் 54 சதவீதத்தைப் பெற்றோம். இந்த முறை எங்கள் வேட்பாளர் பாங் சோக் தாவ் 57 சதவீதத்தைப் பெற்றுள்ளார் என்றார் அவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.