NATIONAL

எஸ்பிஎம் 2023 இன் தேர்வு முடிவு மே 27 அன்று வெளிவரும்

21 மே 2024, 8:05 AM
எஸ்பிஎம் 2023 இன் தேர்வு முடிவு மே 27 அன்று வெளிவரும்

நிபோங் திபால், மே 21: எஸ்பிஎம் 2023இன் தேர்வு முடிவு மே 27 அன்று வெளிவரும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம், உயர் கல்விக் கூடங்களில் சேருவதற்கு மாணவர்கள் தயாராக போதுமான கால அவகாசம் உள்ளது என்ற கல்வி அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது

எஸ்பிஎம் தேர்வு முடிவுகளை இணையத்திலும் பெறலாம் என்பதால், இது ஆசிரியர்களின் விடுமுறை திட்டமிடலைப் பாதிக்காது என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

“இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு அறிந்தோம். அதனால், இந்த மாதம் 27 ஆம் தேதி எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளிவருவதில் மாற்றமில்லை என்பதை நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

எஸ்பிஎம் 2023இன் தேர்வு முடிவுகளை முன்னதாக வெளியிடுமாறு கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்திடம் தேசிய ஆசிரியர் சேவைகள் சங்கம் (NUTP), முறையிட்டது , காரணம் மே 25 அன்று பள்ளி விடுமுறை தொடங்குகிறது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.