NATIONAL

அரசாங்கத்தை விமர்சிக்கலாம், ஆனால் 3ஆர் விவகாரத்தில் வரையறை உள்ளது- பிரதமர் கூறுகிறார்

21 மே 2024, 3:50 AM
அரசாங்கத்தை விமர்சிக்கலாம், ஆனால் 3ஆர் விவகாரத்தில் வரையறை உள்ளது- பிரதமர் கூறுகிறார்

கோலாலம்பூர், மே 21- மலேசியாவில் அரசாங்கத்தை விமர்சிக்க

அனுமதிக்கப்படுவதாகக் கூறிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,

ஆயினும் இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள் (3ஆர்) சம்பந்தப்பட்ட

உணர்ச்சிகரமான விவகாரங்களில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு உள்ளது

என்பதை ஒப்புக் கொண்டார்.

ஊடக சுதந்திரத்தை அமல் படுத்தும் விஷயத்தில் வன்முறையை

உருவாக்கக்கூடிய மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை

விளைவிக்கக் கூடிய நடவடிக்கைகளை தாம் ஒருபோதும் அனுமதிக்க

முடியாது என்று அவர் சொன்னார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்-ஜஸிரா தொலைக்காட்சியின் ‘டோக் டு

அல்-ஜஸிரா‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெறியாளர் சாமி ஜைய்டான்

எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு

தெரிவித்தார்.

ஊடகச் சுதந்திர குறியீட்டு பட்டியலிலிருந்து நாங்கள் இறக்கப்பட்டாலும்

பாதகமில்லை. இதில் முக்கியமானது என்னவென்றால் விமர்சனங்கள்

வரவேற்கப்படுகின்றன. ஆனால் பிரச்சனை என்னவெனில், 3ஆர்

விவகாரங்களை நீங்கள் தொட்டால், இனம், சமயத்தை நிந்தித்தால்,

வன்செயலில் ஈடுபட மக்களை தூண்டினால் அதனை நாங்கள் ஒருபோதும்

அனுமதிக்க முடியாது என்றார் அவர்.

அனைத்துலக ஊடகச் சுதந்திர குறியீட்டு பட்டியலில் மலேசியாவின்

நிலை சரிவு கண்டது தொடர்பில் கருத்துரைத்த போது அவர் இவ்வாறு

தெரிவித்தார். ஊடக சுதந்திர குறியீட்டில் 73வது இடத்தில் இருந்த

மலேசியா கடந்த ஓராண்டு காலத்தில் 34 இடங்கள் சரிந்து 107வது

இடத்திற்கு தள்ளப்பட்டது.

அரசாங்கத்தை விமர்சனம் செய்ததற்காக தமது தலைமையிலான

அரசாங்கம் எந்த பத்திரிகையாளரையும் கைது செய்யவில்லை என்பதோடு

எந்த ஊடகத்தையும் தடை செய்யவில்லை என்பதையும் அன்வார்

சுட்டிக்காட்டினார்.

ஜோகூரி கேசினோ அமைப்பது தொடர்பான பரிந்துரையில் மாட்சிமை

தங்கிய பேரரசரின் பங்கேற்பு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை உதாரணம்

காட்டிய அன்வார், மலாய் ஆட்சியாளர்களை தொடர்பு படுத்தும்

விவகாரங்களில் அரசாங்கம் ஒருபோதும் சமரசப் போக்கை கடைபிடிக்காது

என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.